கிரிப்டோகரன்சி சரியான முதலீடா! வல்லுநர்களின் கருத்து!

0
75
kiriptokaransi

வருமானம்

பங்கு சந்தை தொழிலதிபர் உங்கள் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால் சம்பாத்தியத்தை தாண்டிய முதலீடு இருக்க வேண்டும் என்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக துறைகளில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கும் மாற்றம் எதுவும் நிகழவில்லை.

கிரிப்டோகரன்சி

இன்றைய நிலவரப்படி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது கிரிப்டோகரன்சி. பல இளைனர்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பெரிய தொகையை கிரிப்டோகரன்சியில் முதலீடை செய்து காத்திருக்கிறார்கள்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

கிரிப்டோகரன்சி ஒருநாளும் நம்முடைய சொத்தாக கருதப்படாது. அரசாங்கத்தின் எந்த தலையீடுகளும், ஆதரவும் இந்த வணிகத்தில் இல்லை என்பதே இதற்கு காரணம்.

ரிஸ்க்

தடை செய்யப்படும் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றாலும் கிரிப்டோகரன்சியை அங்கீகரிக்க விருப்பம் இல்லை. இதனால் இது முழுக்க முழுக்க ரிஸ்க் வணிகம் ஆகும்.

தேர்ந்தெடுக்க காரணம்

கிரிப்டோகரன்சி ஒரே நாளில் உங்களை உச்சத்தில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையே பலரும் தேர்தெடுக்க காரணமாக உள்ளது.10,000க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகளில் 90% நாணயங்களுக்கு அடையாளம் தெரிந்த உரிமையாளர் என எதுவும் இல்லை.

உத்தரவாதம்

இந்தியாவில் பாதுகாப்பான முறையில் சில செயலிகளால் இந்த வணிகம் நடைபெற்று வருகிறது. இந்த செயலிகள் ஏமாற்றியது இல்லை இருப்பினும் அந்த செயலிகள் மீது ஒருவர் எந்த உத்தரவாதமும் தர முடியாது.

வல்லுனர்களின் கருத்து

கிரிப்டோகரன்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத வணிகமாக மாறும் என்றும், இந்த வணிகத்தில் ஒரு நேர்த்தி இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அறிவுரை

பெரிய அளவிலான முதலீடுகளை செய்யாமல் சிறிய அளவில் முதலீடுகளை வழங்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். மிகவும் கவனமுடன் இந்த கிரிப்டோகரன்சியில் ஈடுபட வேண்டும் என கூறுகிறார்கள்.

தனிநபர் விருப்பம்

இந்த கிரிப்டோகரன்சியின் மூலம் பலர் செல்வந்தர்களாக மாறியுள்ளனர். பலர் மொத்தமாக இதனை இழந்தும் உள்ளனர். இந்த வணிகம் முன்பைவிட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த கிரிப்டோவில் முதலீடு செய்வது தனிநபர் விருப்பம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here