கிறிஸ்துமஸ் தினத்தில் வீட்டில் டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்வது எப்படி?

0
60
cake

தேவையான பொருள்கள் :

மைதா – 4 டம்ளர்
பேக்கிங் பவுடர் – 1/2 கரண்டி
டூட்டி ஃபுரூட்டி – 1/4 டம்ளர்
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 1 டம்ளர்
எண்ணெய் – 1 கப்
வென்னிலா எசன்ஸ் – 1/2 கரண்டி
தண்ணீர் – 1 கப்
கெட்டியான தயிர் – 1 கப்
வினிகர் – 1/2 கரண்டி
பேக்கிங் சோடா – கால் கரண்டி

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய், வென்னிலா எசன்ஸ், தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை அடித்து கொள்ள வேண்டும்.
  • வேறு ஒரு பாத்திரத்தில் 1 கரண்டி மைதாவுடன், டூட்டி ஃப்ரூட்டியை போட்டு கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.
  • மைதா, பேக்கிங் பவுடர் , உப்பு போன்றவற்றை சேர்த்து சலித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
  • கலந்து வைத்த மைதாவில் டூட்டி ஃப்ரூட்டியை சேர்த்து கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தயிர் , பேக்கிங் சோடா, வினிகர் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும்.
  • அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோ ஓவனை 180 டிகிரி சூடேற்ற வேண்டும்
  • பேக்கிங் ட்ரேயில் கலவையை ஊற்றி டூட்டி ஃப்ரூட்டியை தூவி 20 முதல் 30 நிமிடம் பேக்கிங் செய்து எடுக்க வேண்டும்.
  • சுவையான, அழகான கிறிஸ்துமஸ் கப் கேக் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here