கிளியோபட்ராவின் அழகின் ரகசியமான ஒயின்!

0
60
oyin

கிரேப் ஜூஸ்

உடல் பருமன் அதிகரிக்க,அழகை கூட்ட என காரம் சொல்லி சாப்பிடும் பானம் தான் ஒயின். ஒயினை ஆல்கஹால் மாதிரி பார்க்காமல் அனைவரும் கிரேப் ஜூஸ் என சொல்லி அருந்துகிறார்கள். ஒயின் உலகத்தில் முதன் முதலாக உருவான ஆல்கஹால் ஆகும்.

ஒயின்

பழங்கள் பழுக்கும் போது அதில் இயற்கையாகவே ஈஸ்ட் என்கிற பாக்டீரியா அதை சாப்பிட்டு சர்க்கரையை எத்தனால், கார்பன்-டை-ஆக்ஸைடு ஆக மாற்றும். இதில் உள்ள எத்தனால் போதையை தருகிறது. சிலரை அடிமையாக்கி வைத்திருக்கும் இந்த ஒயின் மிகவும் பழமையானது.

ஒயின் ஜாடி

முற்காலத்தில் ஒயின்களை பாதுகாக்க ஒயின் ஜாடிகளை பயன்படுத்தியுள்ளனர். 9000 வருடங்களுக்கு முன்னாடி இந்த ஜாடிகளை 2017ல் ஜார்ஜியாவில் ஒரு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

நாடுகள்

கண்டுபிடிக்கப்பட்ட ஜாடி இன்றைக்கும் ஜார்ஜியாவில் ஒயின் வைக்க பயன்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜார்ஜியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் இந்த ஒயின் தடங்களை கண்டுபிடித்துள்ளனர். அர்மேனியாவில் மிகப்பெரிய ஒயின் தயாரிக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் திராட்சையும், அரிசியும் கலந்து தயாரித்ததை கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்து

எகிப்தியர்கள் ஒயினை ரத்தத்தின் அடையாளமாக பார்த்துள்ளனர். அவர்கள் பிரமிடுகளின் ஓவியத்தில் இதனை வரைந்து வைத்துள்ளனர். அங்கு புதைத்து வைத்த அரசர்களிடம் வைக்கப்பட்ட பொருள்களிலும் ஒயின் ஜாடி இருந்துள்ளது.

கிளியோபட்ரா

உலகத்திலேயே அழகியாக கொண்டாடப்பட்ட கிளியோபாட்ராவே அவருடைய அழகிற்காக ஒயினை சாப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவம்

ஐரோப்பா நாடுகளில் ஒயின் என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த காரணம் கிறிஸ்தவ மதம் ஆகும். இயேசு கிறிஸ்து தண்ணீரை முதன் முதலாக ஒயினாக மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிரேக்க மக்கள் பல இடங்களில் இந்த ஒயினை பரப்பியுள்ளனர்.

முந்தைய காலங்களில் ராஜாக்கள் மட்டும் குடிக்கும் பானமாக இது இருந்தது.
பெர்மண்டேஷன் செய்யப்படும் அனைத்து பழங்களிலும் ஒயின் காணப்படுகிறது. அரிசி, ஜெரி, மாதுளை போன்ற பழங்களிலும் ஒயின் உருவாக்கப்படுகிறது.

ஒயின் திராட்சை

ஒயின் தயாரிக்கும் திராட்சை மிகவும் சிறிதாக இருக்கும். இந்த திராட்சையின் தோலானது தடிமனாக இருப்பதால் இதிலிருந்து ரெட் கலர் கிடைக்கிறது. சாதாரண திராட்சையில் இருக்கும் சர்க்கரை அளவை விட இதில் அதிகம் சர்க்கரை காணப்படுகிறது. இந்த திராட்சைகளை கையால் மட்டுமே பறிப்பார்கள்.

தயாரிக்கும் முறை

பறித்து வைத்த திராட்சைகளை தரம் பார்த்து எடுத்து கொள்வர். அதனை கொட்டி பின் காலால் மிதித்து அதிலிருந்து ஜூஸ் எடுப்பார்கள். பின் அந்த ஜுஸில் பெர்மண்டேஷன் செய்ய கூடிய பொருள்களை சேர்ப்பார்கள். பல நாட்கள் அப்படியே வைத்து அதனை தயாரிப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here