குடியரசு தினவிழா, தேர்தல் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

0
44
முன்னெச்சரிகை

பாதுகாப்பு

குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்த கூடும் என உளவுத் துறை தெரிவித்துள்ளதாக மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தகவல்

குடியரசு தின விழா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கும் சில இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசியல் தலைவர்கள், படையினர் தங்கும் முகாம்கள் போன்றவை பயங்கரவாதிகளின் குறியாக இருக்கலாம் என உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அறிக்கை

குடியரசு தினவிழா, மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியாக அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

டில்லி வட்டாரங்கள் கூறியவை

அனைத்து நிலை பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து பயங்கரவாத தடுப்பு பயிற்சிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் போன்ற இடங்களில் தாக்குதல் முயற்சி நடந்தால் சமாளிக்க அதிரடியாக செயல்படும் திறன் உள்ள படையினரை நிறுத்த அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here