குடும்பம் நடத்த அனுமதிக்காததால் மருமகன் மாமியாரை கொலை செய்ய முயற்சி!

0
50
கொலைமுயற்சி

டிரைவர்

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆனந்தன் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கும் பிந்து என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனந்தன் அடிக்கடி மது அருந்திவிட்டு பிந்துவை அடித்ததாக கூறப்படுகிறது.

பிந்து

கடந்த 6 மாதத்துக்கு முன் பிந்து டிரைவர் ஆனந்தனை விட்டு பிரிந்துவிட்டார். ஆனந்தன் பிந்துவை பலமுறை குடும்பம் நடத்த வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ள போது பிந்து மறுத்துவிட்டு தாய் வீட்டில் இருந்துள்ளார்.

படுகாயம்

நேற்று முன்தினம் பிந்துவை குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்த போது மாமியார் ஆனந்துடன் அனுப்ப மறுத்துவிட்டார். கவிதாவுக்கும் ஆனந்துக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆனந்த் கத்தியை எடுத்து மாமியாரின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மருத்துவமனை

படுகாயமடைந்து போராடிய கவிதாவை அக்கம்பக்கத்தினர் பாடியநல்லூர் சுகாதார மையத்தில் கொண்டு சேர்த்தனர். அவர் பின் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கைது

வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஆனந்தை கைது செய்துள்ளனர். ஆனந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here