குமரியில் குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்!

0
52
kulanthai

குழந்தை

நாகர்கோவில் அடுத்த குளத்தூரில் நேற்றைய தினம் 6 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த வாலிபர் விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கிக்கொண்டு ஓட முயன்றார்.

போலீஸ்

சிறுமி சத்தம் போட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். வாலிபர் சிறுமியை விட்டு தப்பிக்க முயன்ற போது பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

விசாரணை

விசாரித்து பார்த்ததில் அந்த வாலிபர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு 30 வயது என்பதும் தெரியவந்தது. குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகத்துடன் போலீசார் அந்த வாலிபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here