குரங்குக்கு உயிர் கொடுத்த இளைஞர்க்கு பாராட்டுகள் குவிந்தன – நெகிழ்ந்து பாராட்டிய சூர்யா!

0
69
ootunar

ஓட்டுநர்

பெரம்பலூரில் நாய் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை ஓட்டுநர் மூச்சு கொடுத்து காப்பாற்றியுள்ளார்.

குரங்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் விரட்டிவிரட்டி கடித்தன. காயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி கிளை ஒன்றில் படுத்தது. இதை பார்த்த டிரைவர் குரங்கை கீழே இறக்கினார். குரங்கை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

மூச்சு கொடுத்த ஓட்டுநர்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குரங்கின் தலை துவண்டு விழுந்தது. ஓட்டுநர் குரங்கின் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி விட்டார். அசைவு எதுவும் இல்லாததால் அதன் வாயோடு தன் வாயை வைத்து ஊதினார். பின்னர் மூச்சு விட தொடங்கிய அந்த குரங்கு மெதுவாக கண் விழித்தது.

பாராட்டு

பிறகு குரங்கை பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கு குரங்குக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி வனத் துறையினரியிடம் ஒப்படைத்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் நண்பர் பதிவிட்டுள்ளார். இதனால் பிரபுவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சூர்யா பாராட்டு

இந்த வீடியோவை சூர்யா டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் செய்த செயலை பாராட்டி உள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here