குளிர்காலங்களில் முகம் வறண்டு போகுதா? சருமம் பொலிவு பெற இத யூஸ் பண்ணுங்க !!!!!

0
67
varanda face

குளிர்காலங்களில் பெரும்பாலான மக்கள் சரும பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். பனி பொழியும் காலங்களில் சரும பிரச்சனை இருமடங்காகிறது. எனவே குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் கிறீம்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் இல்லாத பொருட்களைக் சருமத்தில் தேய்த்து பராமரிக்க விரும்புவார்கள். கெமிக்கல் உபயோகிப்பதால் எளிதில் சருமம் முதுமை தோற்றம் அளித்தது போல் சருமத்தை காமிக்கிறது.

சருமத்தின் பொலிவு

சரும வறட்சியைத் தடுக்க நல்ல நேச்சுரல் மாய்ஸ்சுரைசரைத் தேடுகிறீர்கள் என்றால் பின்வரும் ஃபேஸ்பேக்குகளை போட்டு பாருங்கள் . இந்த கலவை தினமும் இரவு நேரங்களில் போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து விடுபடலாம்.

முட்டை மஞ்சள் கரு மற்றும் தேன்

ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் முட்டையின் மஞ்சள் கரு ,1/2 பூன் தேன் ,1 பூன் பால் பவுடர் இவைகளை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவேண்டும். பின் முகம் மற்றும் கை கால் ஆகிய இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும் .

தேன் மற்றும் தயிர் ,முட்டை மஞ்சள் கரு

முகப்பரு மற்றும் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் . ஒரு பாத்திரத்தில் 1/2
பூன் தேன், முட்டையின் வெள்ளைக்கரு,1 பூன் தயிர்,முல்தானி மெட்டி பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் . பின்னர் முகத்தில் 20 நிமிடம் தடவி ஊறவைக்கவும். பின்னர் அதை கழுவ வேண்டும்.

பப்பாளி பழம்

நன்கு பழுத்த பப்பாளி பழத்தை அரைக்க வேண்டும். அரைத்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இதனை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீக்குகிறது. மற்றும் முகம் பொலிவுபெறுகிறது.

கேரட்

கேரட்டை துருவி முகத்தில் வறண்டு இருக்கும் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ முகத்தின் பிரச்சனைகளை போக்குகிறது.

அவகேடோ

நன்கு பழுத்த இந்த பழத்தை அரைத்து அதனுடன் 1 பூன் தேங்காய் எண்ணெய்,1
பூன் தயிர் ,1 பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து முகம் ,கை ,கால் அவற்றில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கொண்டு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி நன்கு காயவைத்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தினமும் தடவினால் குளிர்காலத்தில் வரும் வறட்சியைப் போக்கலாம்.

தேன் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

1 பூன் ஆரஞ்சு ஜூஸில் 1 பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். ஜூஸ்சை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் நீரால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தின்
வறட்சி நீங்கி முகம் பொலிவு பெறும்.

கோதுமை தவிடு

ஒரு பாத்திரத்தில் 3 பூன் கோதுமை தவிடை எடுக்க வேண்டும். அதன் உடன் 1 பூன் பாதம் பவுடர் ,1 பூன் தேன் ,1 பூன் தயிர் ,1 பூன் ரோஸ் வாட்டர் இவற்றை சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here