கூட்டுறவு சங்கத்தில் நடந்த தரமான சம்பவம்! இறந்தவருக்கு 1.20 லட்சம் கடன்!

0
49

கடன்

சேலம் மாவட்டம், இடைப்பாடியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் உள்ள விவசாய கடன்களிலும், அரசு தள்ளுபடி செய்த கட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

முறைகேடு

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இங்கு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அங்கு முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து கூறப்பட்டவை

58 வயதான ராமசாமி வேட்டுவப்பட்டியை சேர்ந்தவர். சங்கத்தில் உறுப்பினரான இவர் 2012 ஜனவரி இறந்துவிட்டார் என கூறப்படுகிறது. 2019ல் அவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை கட்ட சார்பதிவாளர் கடந்த டிசம்பர் சம்மன் அனுப்பியுள்ளார்.

நடவடிக்கை

ராமசாமியின் மகன் சித்துராஜ் அவர் முன் ஆஜராகி தந்தை இறந்ததை தெரிவித்துள்ளார். அவர் பெயரில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். சங்க உறுப்பினர்கள் இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here