கேரளாவில் பா.ஜ.க மற்றும் எஸ்.டி.பி.ஐ அடுத்தடுத்து கொலையால் பதற்றம்!

0
49
kerala

கொலை

கேரளாவின் ஆலப்புழா பகுதியில் எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் பாஜக நிர்வாகியும் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலர் கே.எஸ் ஷான் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது மோதியுள்ளனர். அதில் தடுமாறி கீழே விழுந்த ஷானை காரில் வந்தவர்கள் வெட்டினர். இதில் அவர் உயிரிழந்தார்.

ரஞ்சித் சீனிவாசன்

அந்த கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள் பாஜக வின் ஓ.பி.சி செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் என்பவரை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்துள்ளனர்.

கண்டனம்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் இது போன்ற கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற வன்முறை சம்பவங்கள் மாநிலத்திற்கு ஆபத்தானது என கூறியுள்ளார். மாநில தலைவர் சுரேந்திரன், முரளீதரன் போன்றோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here