கொரோனா வந்தால் கொரோனாவை விரட்டியடிக்க சில வழிமுறைகள்..!

0
55
கொரோனா

கொரோனா

வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளவர்கள் குறிப்பிட்ட உணவு முறைகளையும், ஆசனங்களையும் கடைபிடித்தால் விரைவில் குணமடையலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிரமாக கொரோனா பாதிப்பு இருந்தபோது இயற்கை நல மருத்துவ முறைகளே நல்ல பலனளித்து குணமடைய செய்ததாக அவர் கூறினார்.

யோகா, இயற்கை மருத்துவ துறை நிர்வாகி கூறியது

  • கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது அவர்களுக்கு பிராணயாம பயிற்சிகள் அளித்ததன் மூலம் நுரையீரலின் செயல் திறன் அதிகரித்து சுவாச பாதைகளும் சீரானது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிராணயாம பயிற்சிகளும், சில ஆசனங்களும் வழி வகுக்கும்.
  • கொரோனா நோயாளிகளுக்கு பயிற்சியினை அளிக்க நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • மூலிகை பானங்கள், நவதானிய வகைகள் போன்ற ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படுவதுடன் அரோமா தெரபி போன்றவை அளிக்கப்படுகிறது என அவர்கள் கூறினார்கள்.
FotoJet 1 2

ஆரோக்கிய உணவு முறைகள்

காலை 6 மணி :

நெல்லிக்காய், எலுமிச்சை, துளசி, இஞ்சி, மஞ்சள் தூள் உடன் குடிநீர் கலந்து பருக வேண்டும்.

காலை 8.30 மணி:

இட்லி -4 + தக்காளி சட்னி சாப்பிட வேண்டும் அல்லது முளைகட்டிய பயறுகள் + சாலட்

காலை 11 மணி :

கேரட் / அன்னாசி சாறு அல்லது நெல்லிக்காய் -1+ எதாவது ஒரு பழம்.

மதியம் 1 மணி :

அரசி சாதம் + சாம்பார் + கீரை கூட்டு + சர்க்கரைவள்ளி கிழங்கு + ரசம் + இஞ்சி சேர்த்த மோர்

மாலை 4.30 மணி :

இஞ்சி , துளசி, மிளகு , அதிமதுரம் , மஞ்சள் போன்ற மூலிகைகளை சேர்த்து கொதிக்க வைத்த மூலிகை பானம் + முளைகட்டிய பயறு.

இரவு :

அரிசி பொங்கல் / இடியாப்பம் 4 + தக்காளி சாம்பார்.

ade1de3e57c1134f9b534de6969a18124

கொரோனாவை விரட்டும் சில ஆசனங்கள்

சலபாசனம் :

குப்புறப்படுத்து இரண்டு கைகளையும் தொடையின் கீழே வைத்து மூச்சை உள்ளே இழுத்தபடி இரு கால்களையும் மேலே தூக்கி முடிந்தவரை உயர்த்த வேண்டும்.

மக்கராசனம் :

கண்களை மூடி குப்புறப்படுத்து தலை , தோள்பட்டை , தாடையை மேலே உயர்த்தி கைகளால் தாங்கி கொள்ள வேண்டும்.

பிராமரி பிராணாயாமம் :

ஆள்காட்டி விரலை காதுகளில் வைத்துக்கொண்டு மூச்சினை ஆழமாக உள்ளே இழுத்து வெளிவிடும்போது ம்ம்ம் என்று வாயை மூடி சத்தம் எழுப்ப வேண்டும்.

நாசி சுத்தம் :

உப்பு நீர் உள்ள பாத்திரத்தை மூக்கு துவாரத்தில் நுழைத்து வைக்க வேண்டும். பின் முன்புறம் குனிந்து தலையை ஒரு புறமாக சாய்த்து வாயை திறந்து நீர் வெளியேறுமாறு செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here