கோவிட் சான்றிதழை வைத்துக்கொள்ள மைக்ரோ சிப்!

0
74
sip

மைக்ரோ சிப்

ஸ்வீடனை சேர்ந்த ஒரு நிறுவனம் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை மைக்ரோ சிப்பில் பதித்து அதனை உடலிலேயே வைத்துக் கொள்ளும் வசதியை உருவாக்கி உள்ளது.

சான்றிதழ்

உலகம் முழுவதும் மால்,தியேட்டர்,ஹோட்டல் போன்ற இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. மைக்ரோ சிப்பில் பதித்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் நேரத்தில் டிவைஸ் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் சான்றிதழை மொபைலில் காட்டிவிடுமாம்.

ஸ்வீடன்

ஆவணங்களை சேமிக்க உடம்பில் மைக்ரோ சிப்பை செலுத்தி கொண்டவர்கள் ஸ்வீடன் நாட்டில் பலர் உள்ளனர். நம்முடைய அலுவலக ஐடி, பயண அட்டைகள் என எல்லாவிதமான ஆவணங்களையும் இதில் சேமித்து வைக்க முடியும். நமக்கு தேவைப்படும் நேரத்தில் அதனை மொபைலில் பார்க்க முடியும்.

நிர்வாக இயக்குனர் கூறுவது

நான் என்னுடைய கையில் ஒரு மைக்ரோ சிப்பை செலுத்தி வைத்திருப்பதால் தேவைப்படும் போது ஸ்கேன் செய்து எடுத்து கொள்ள முடிகிறது. பல இடங்களுக்கு செல்லும் போது ஸ்கேன் செய்து சான்றிதழை சரிபார்த்து கொள்வார்கள். இந்த சிப் பொருத்தி கொள்வதற்கு 100 யூரோக்கள் செலவாகும் என கூறியுள்ளார். இந்த மைக்ரோ சிப்பை 30-40 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம்.

செலுத்தும் முறை

இதனை உடலில் ஒரு ஊசி மூலம் தோலுக்கு அடியில் செலுத்திவிடுவார்கள். ஒரு முறை செலுத்திவிட்டால் தேவையான அனைத்து ஆவணங்களை பதிவு செய்து வைத்து கொள்ளலாம். சிலர் இதனை வைத்துக்கொள்ள அச்சப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here