கோவில் நிலங்கள் மோசடி ; அரசு அதிகாரிகள் விசாரணை !!!!

0
78
indhu kovil

தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமாக நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது.

நிலங்கள் தனியாருக்கு விற்பனை

அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் தலையிட்ட காரணமாக 20 ஆண்டுகளில் ஏராளமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிலங்கள் கோவில் நிலங்களாக மாற்றப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

கோவில் நிலங்கள்

இதனை தொடர்ந்து மாடம்பாக்கத்தை சேர்ந்த ஆர்வலர் எஸ்.ஜெயபால் வயது 59 அவர் கூறியதாவது: கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் 2019ல் முதல் முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினேன்.
2001ல் இந்த நிலங்களுக்கு கணினி பட்டா பெறப்பட்டுள்ளன என ஹிந்து சமய துறை பதில் அளித்தது.

temple

87.58 ஏக்கர் நிலங்கள்

எனவே நிலங்களை தானம் கொடுத்தது யார் என்று இரண்டாவது முறையாக கேள்வி எழும்பியுள்ளது. நில ஆவணங்கள் கோவிலில் இல்லை. வருவாய் துறை ஆவணங்கள் வாயிலாக நிலங்கள் பராமரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையில் விசாரித்தபோது 87.58 ஏக்கர் நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக இருந்தது. அது கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

கணினி பட்டா

கணினி பட்டா தொடர்பான தகவலை வருவாய்த் துறை ஆன்லைன்னில் பார்த்த போது 2001 முதல் 2015 வரை 72.90 ஏக்கர் நிலங்களுக்கு கணினி பட்டா கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 14.68 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா இன்னும் கொடுக்கவில்லை.

தகவல் அறியும் சட்டம்

மொத்தம் 87.58 ஏக்கரில்72.90 ஏக்கர் நிலங்கள் மட்டும் கோவிலின் பாதுகாப்பாக இருகிறது. பாதி 14.68 ஏக்கர் நிலங்கள் கணக்கில் காட்டாதது என தெரியவந்துள்ளது. இந்த நிலங்களின் நிலை குறித்தது நிலவரம் தெரியவில்லை. மூன்றாவது முறையாக தகவல் சட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான 72.90 ஏக்கர் நிலங்களில் எத்தனை ஏக்கர் நிலங்கள் வடைக்கு வீட்டு மனைகளாக விடப்பட்ட, அதற்கு எவ்வளவு வரி மற்றும் வாடகை வசூலிக்கப்படுகிறது.

வாடகை

அது குறித்து நான்காவது முறையாக கேள்வி எழுப்பியதற்கு ஒரு பதிலும் அளிக்கவில்லை. தகவல் ஆணையத்தில் முறையீடு செய்த பிறகும் இன்று வரை பதில்வரவில்லை. 1960ம் ஆண்டுக்கு முன் 2001க்கு முன்பு வரை கோவிலுக்கு எழுதி கொடுக்கப்பட்ட நிலங்கள் ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரிகிறது.

kovil

கோவில் நிர்வாகம்

கோவில் நிருவாகத்தில் உள்ள ஒருவரும் ஹிந்து சமய அலுவலர் ஆகிய இருவரும் இணைந்து வருவாய் துறை பதிவேட்டில் கோவில் நிலம் பதிவாகி உள்ள எண்கள்: 612, 613, 615 மற்றும் 627 பல ஏக்கர் கோவில் நிலங்களை உறவினர்கள் பெயரில் பட்டா பெற்று வைத்து உள்ளனர்.

மனு

கோவிலில் உள்ள நிலங்கள் மாயமானது முறைகேடுகளில் ஒன்றாகும். இதை குறித்து முதல்வரின் ஹிந்து சமய துறை கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குழு அமைத்து விசாரானை

நேர்மையான அதிகாரிகள் குழு அமைத்து விசாரித்தால் பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்தை மீட்க முடியும் என்று கூறினரர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here