கோவில் விவகாரத்தின் காரணமாக பஞ்சாப் கோவில்களில் பாதுகாப்புகள் தீவிரம்!

0
67
panjab

அம்ரிஸ்டர்

பஞ்சாப்பில் புனித ஸ்தலமான பொற்கோயிலில் புனிதத்தன்மை குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மக்களால் கொல்லப்பட்டார்.

பிரச்சனை

சீக்கிய மத கொடியை அவமதித்த ஒருவர் கொல்லப்பட்டதால் பிரச்சனை பெரிதாகியது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் முதல்வர் தீவிரமாக இதனை கண்காணித்து வருகிறார்.

விசாரணை

துணை முதல்வருடன் சென்று குற்றத்தை கோவில் நிர்வாகியிடம் கேட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு துறையை சேர்ந்த கமிஷ்னர் தலைமையில் விசாரணை குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டம்

காவல்துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் காலை 11.30 மணி அளவில் வளாகத்துக்குள் குற்றவாளி நுழைந்ததாக தெரிவித்தார். குற்றவாளியின் உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது இது குறித்து தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார். சிசிடிவி காட்சிகள் இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

தண்டனை

சட்டப்பிரிவு 295-ஏ படி மதத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை வழங்கலாம். பஞ்சாப் மாநில அரசு கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

காவல்துறை

கோவில்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குருத்வாரா கமிட்டியுடன் காவல்துறை தொடர்பில் இருப்பதால் எதிர்காலத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here