கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு மீண்டும் பறக்கலாம் என விமான சேவை அறிவிப்பு!

0
63
vimaana nilaiyam

விமான சேவை

கொரோனா பரவி வந்ததன் காரணமாக 2020ம் ஆண்டு கோவையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. கோவை – சார்ஜா இடையே விமான சேவை நடந்து வரும் நிலையில் தற்போது கோவை -சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது.

நிறுவனம்

இந்த விமான சேவை வாரத்தில் புதன்,வெள்ளி,ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் செல்ல முடியும். இரவு 10.45 க்கு தரையிறங்கும் விமானம் மீண்டும் இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்லும் விமான சேவையை ‘பிளை ஸ்கூட்’ நிறுவனம் துவங்கியுள்ளது.

அதிகாரி கூற்று

சிங்கப்பூரில் இருந்து நேரடியாக கோவை வருபவர்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும் என்றும், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து பின் கோவை வர முயற்சிப்பவர்கள் பயணிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here