கோவையில் கை,கால்கள் கட்டப்பட்டு மாணவி கொலையால் பரபரப்பு!

0
57
maanavi

கோவை

கோவை சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண் கணவனை பிரிந்த நிலையில் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அவருடைய இரண்டாவது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகளை 11ம் தேதி திடீரென காணவில்லை.

விசாரணை

பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் பதறிப்போன தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் அதிர்ச்சி

சிவனாந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் நகரில் உள்ள முள்புதரில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக போலிஸுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் அதனை பிரித்து பார்த்த போது கை, கால்கள், வாய் கட்டிய நிலையில் சிறுமி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொலை வழக்கு

கொலை செய்யப்பட்ட மாணவி காணாமல் போன மாணவி என்பது போலீஸுக்கு தெரியவந்தது. காணாமல் போன வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப நண்பர்

கோவை அருகே அவர்களது குடும்ப நண்பரான முத்துக்குமார் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையில் நகைக்காக கொலை செய்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நகைக்காக உறவினரே கொலை செய்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here