கோவை ,திருப்பூரில் வளர்ச்சி குழுமம் துவங்க உள்ளதாக சட்டசபையில் அறிவிப்பு

0
46
kovai

கோவை , திருப்பூர்

கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் வளர்ச்சி குழுமம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிக்காக குழுமத்தை உருவாக்க வேண்டும் என்று தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. தனித்தனி குழுமங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சிதுறை இரண்டு அரசாணைகளை தனித்தனி வளர்ச்சி குழுமங்களை உருவாக்குவதற்காக அரசாணைகளை நவம்பர் 22 ம் தேதி வெளியிடப்பட்டது.

வளர்ச்சிகுழுமங்கள்

வீட்டுவசதிதுறை செயலரை தலைவராகவும்,கலெடர்களை துணைதலைவராகவும் தலா 12 பேர் கொண்ட குழுமம் அமைக்கபட்டுள்ளது. 14 பேர் நடுத்தர தொழில்துறை செயலாளர் தலைமையில் சிறுசிறு ஆலோசனை குழுமம் உருவாக்கபட்டது. தனி வளர்ச்சி குழுமங்களை உருவாக்கும் பணிகளில் இவ்விரு நகரங்களும் ஈடுபட்டுள்ளன.

குழுமங்களை அமைக்க நடவடிக்கை

கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மட்டுமே குழுமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5 ம் தேதி தொடங்கப்பட்ட கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்புஉள்ளது என தெரியபடுத்தியுள்ளன.

வளர்ச்சி திட்டங்கள்

குழுமம் செயல்பட்டால் கோவை மற்றும் திருப்பூருக்கு மெட்ரோ ரயில் புறவழிசாலைகள் ஆகிய வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும். கவர்னர் ஜனாதிபதி விரைவாக ஒப்புதல் தந்தால் இக்குழுமம் புதிய நிதியாண்டில் செயல்பட வாய்ப்புண்டு. சென்னைக்கு பெரிய கட்டங்கள்,லே-அவுட்களின் கோப்புகளை அனுப்பி காத்திருப்பதிலிருந்து விடுதலையும் கிடைக்கிறது.

கிராமங்கள்

1,276 சதுர கி.மீ.பரப்பளவுள்ள திட்டக்குழுமப் பகுதி 1,532 சதுர கிலோ மீட்டர் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மாநகராட்சிப் பகுதியுடன் 71 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்படவுள்ளது.
திருப்பூர் உள்ளூர் திட்டக்குழுமப் பகுதி, 220 சதுர கிலோ மீட்டரில் இருந்து 617 சதுரகிலோ மீட்டர் ஆக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனுடன் 4 பேரூராட்சிகள்,31 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here