சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி! – ஐஸ்வர்யாராய்க்கு சம்மன்!

0
74
isvarya

பட்டியல்

2015ம் ஆண்டில் பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியானது. இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. பனாமா முதலீடு செய்த பட்டியலில் ஐஸ்வர்யா ராய் உட்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

ஆவணங்கள்

இந்த நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததால் முறைகேடான சொத்துக்களை வாங்கிய பிரபலங்கள் உட்பட 500 பேரின் பெயர்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அவகாசம்

அந்த 2 முறையும் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இன்று அவர் ஆஜராகுவார் என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பரபரப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா நாட்டை சேர்ந்த நிறுவனம் ரகசிய ஆவணங்களை ஜெர்மனி ஊடகம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பென்செக்கா நிறுவனத்தின் பணி வெளியானது. 80 நாடுகளை சேர்ந்த செய்தியாளர்கள் இவற்றை ஆய்வு செய்தனர்.

குற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தம்பி, பிரிட்டன் முன்னாள் பிரதமர், கால்பந்து வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அரசியல் வாதிகள், தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நிறுவனங்கள் இதில் சிக்கின. அந்தந்த நாடுகளில் விசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here