சபரிமலை ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் அதிகரிப்பு!

0
46
iyaapan

கோவில் நடை

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15 ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடந்த பூஜைகளுக்கு பிறகு கடந்த 26 ம் தேதி மண்டல பூஜை நடந்த அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது.

அனுமதி

மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று 4.30 – 11 மணி வரை ஏராளமான பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

ஆன்லைன் பதிவு

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 60,000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுவதால் நேற்றைய தினம் ஏராளமான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக வந்துள்ளனர்.

முகாம்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எருமேலி பெருவழிப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த வனப்பாதையில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தரிசன நேரம்

பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here