சருமத்தை பொலிவாக்கும் கரும்பு !!!

0
75
மருத்துவ குணம்

பொங்கல் என்றால் முதல் நினைவுக்கு வரும் கரும்பு வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் நிறைய மருத்துவ பலன்கள் உள்ளன.

மருத்துவ குணம்

 • கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தொண்டைப் புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
 • கல்லீரல் நன்றாக செயல்படவும் பின் செரிமானம் நன்றாக நடைபெறவும் கரும்பு உதவுகிறது.
 • கரும்பில் உள்ள இயற்கை வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக் கொன்று இணைந்து ரத்த உறைவை தடுப்பதுடன் மட்டும் மல்லாமல் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் இது உதவுகிறது .
 • கரும்பை உண்பதால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.

கால்சியம்

 • பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 • சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
 • இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.

கரும்பு

 • கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது .
 • கரும்பை கடிப்பதன் மூலம் வாய் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
 • கரும்பில் உள்ள இயற்கை பொருள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.
 • உடலில் உள்ள சூட்டைக் குறைத்து உடலின் வெப்ப நிலையை சீராக்குகிறது.

உடலுக்கு புத்துணர்ச்சி

 • உடலில் உள்ள மாசுகளை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
 • கரும்பு சாற்றுடான் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நோய் குறையும்.
 • கரும்புச் சாறுடன் தேய்ங்காய் பால் சேர்த்து குடித்தால் சீதபேதி குறையும்.
 • கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டால் வாய் நாற்றம் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here