சாதாரண சைக்கிளுக்கு இ- மிதிவண்டி கொடுக்கும் பிரபல நிறுவனம்!

0
78
mithivandi

திட்டம்

மின் வாகன உற்பத்தி நிறுவனமான கோஜீரோ மொபிலிட்டி வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

குறிக்கோள்

கோஜீரோ நிறுவனம் வழக்கமான மிதிவண்டியை பெற்றுக்கொண்டு நிறுவனத்தின் புதிய இ -சைக்கிளை வழங்க உள்ளது. பேட்டரியால் இயங்கும் இ- சைக்கிள் பயன்பாட்டை நோக்கி ஈர்ப்பது இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

அறிமுகம்

இந்த திட்டத்தை கோஜீரோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. எக்ஸ்சேஞ்சிற்கு ரூபாய் 7,000 – 25,000 வரை வழங்க உறுதி அளித்துள்ளது.

கூட்டணி

இந்த நிறுவனம் தற்போது புதிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. புதிய சுவிட்ச் திட்டம் நாட்டின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சலுகை வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை மட்டுமே செயல்படும் என அறிவித்துள்ளது.

இ-சைக்கிள்

தினசரி அலுவலக பயன்பாட்டிற்கு உகந்தவையாக இந்த சைக்கிள் இருக்கிறது. நகர்ப்புறங்களில் அதிக வாகன நெரிசல் கொண்ட சாலைகளுக்கு சிறந்த வாகனமாகவும் இவை இருப்பதால் இ -சைக்கிளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோஜீரோ நிறுவனத்தின் நிறுவனர் கூறியது

அதிகரித்து வரும் மின் வாகன தேவையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இதன் பிரச்சாரம் நாட்டில் தொடங்கப்பட்டிருக்கிறது என கூறினார். நுகர்வோர் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்க விரும்புவதால் மக்கள் பழங்காலத்திலிருந்தே மிதிவண்டியை ஓட்டி வருகின்றனர்.

வசதி

எக்ஸ் சீரிஸ் இ -பைக்குகள் பயனரின் அனைத்து வழக்கமான தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது என்றும், அவர்களுக்கு எலக்ட்ரிக் டிரைவ் ட்ரைனிங் வசதியும் கிடைக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here