சிடி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி!

0
60
mammi

மன்னர்

16ம் நூற்றாண்டில் பண்டைய எகிப்தை ஆண்ட அமென்ஹொதேப் மன்னரின் உடல் தற்போது முதல் முறையாக ஸ்கேன் மூலம் ஆய்வுக்கு அனுப்பியதில் அவரது பற்கள் நல்ல நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

969f04eb2725237c042d5bbcd375fefe9

மம்மி

எகிப்தில் வாழ்ந்த அரசர்கள் உடல்கள் துணியால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதை மம்மிக்கள் என்று அழைக்கின்றனர். அழிந்து போன எகிப்து பற்றிய தகவல்களை இந்த மம்மி மூலமாக அறிய முடிகிறது.

படங்கள்

எகிப்திய மம்மிகள் புராண நம்பிக்கைகளுடன் தொடர்புடையதால் அவர்களுக்கு மரணமில்லை என கருதுகிறார்கள். இந்த எகிப்து கதைகளை வைத்து ஹாலிவுட் படங்கள் வெளியாகி பிரபலமாகி உள்ளது.

அரசரின் மம்மி

கிமு 11ம் நூற்றாண்டுக்கு பின் முதன் முறையாக அரசின் மம்மியை டிஜிட்டல் முறையில் அவிழ்த்ததில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த அரசர் கிமு 1525 -1504 வரை எகிப்தை ஆண்டுள்ளார்.

அலங்காரம்

அந்த மம்மியானது கச்சிதமாக தயாரிக்கப்பட்டு, அழகான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது முகம் கழுத்து மூடப்பட்டிருந்ததால் அதனை சேதப்படுத்தி திறக்க வேண்டாம் என இருந்துள்ளனர்.

969f04eb2725237c042d5bbcd375fefe11

சிடி ஸ்கேன்

டிஜிட்டல் முறையில் ஸ்கேன் மூலம் கெய்ரோ பல்கலைக்கழக பிரிவின் பேராசிரியரும், ஆய்வின் தலைவரும் ஆய்வின் முடிவுகளை மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

விவாதம்

அந்த உடலின் தோற்றம், இறந்த காரணம், மம்மியாக்கும் முறை போன்றவற்றை விவாதித்துள்ளனர்.

969f04eb2725237c042d5bbcd375fefe10

ஆய்வில் தெரிந்தவை

அவரது குறுகிய கன்னம், சிறிய மூக்கு, சுருள்முடி, பற்கள் போன்றவை தெரியவந்துள்ளது. மரணத்திற்கான காரணமும் தெரியவில்லை என்றும், காயங்கள் உடலில் இல்லை என ஆய்வின் அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here