சினிமா விளம்பரத்தால் சர்ச்சையில் முடிந்த அரசு விழா!

0
70
naatiyam

விழா

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா டிசம்பர் 23 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவானது இந்த மாதம் 23 வரை நடைபெறும்.

நாட்டியங்கள்

விழாவில்,தினமும் மாலை 5.30 -8.30 வரை பாரம்பரிய கிராமிய கலைகள் , நாட்டியங்கள் நிகழ்த்தப்படுகின்றன.நேற்று முன்தினம் இரவு வேலன் திரைப்பட இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்டோர் பங்கேற்று படவெற்றிக்காக பார்வையாளர்களிடம் விளம்பரப்படுத்தினர்.

சர்ச்சை

அரசு விழாவில் இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. விழா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் செல்ல கூடாது என கொரோனா தடுப்பிற்காக தடைவிதிக்கப்பட்டது. நடிகர், நடிகைகளுடன் செல்பி எடுக்க ரசிகர் கூட்டம் திரண்டதால் கொரோனா விதிகள் காற்றில் பறந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here