சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு காரணம்? எதனால் சிறுநீர் பாதிப்படைகிறது !!!

0
78
சிறுநீரகங்களின் செயலிழப்பு

மனித உடலில் சிறுநீரகம் முக்கியமான உறுப்புகளாகும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் நீரை வெளியேற்ற உதவுகிறது. சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவைகளை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உருவாக்குகின்றது. எலும்பு மஜ்ஜையில் உள்ள இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது.

சிறுநீரகம்

முக்கிய வேலையைகளை செய்யும் சிறுநீரகங்கள் சில நேரங்களில் தவறான உணவுப் பழக்கங்கள், மருந்துகள் ,சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்கூறுகள் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் சிறுநீரக கற்கள், சிறுநீரக புற்றுநோய் மற்றும் பாலிசிஸ்டிக் சிறுநீரக போன்ற நோய் அபாயம் அதிகரிக்கின்றது . எனவே சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உண்ணும் உணவுகள்

நாம் உண்ணும் சில உணவுகள் நம் சிறுநீரகங்களை நேரடியாக பதிகின்றன . சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறுநீரகங்களின் செயல்பாடு

*உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியிட உதவுகிறது.
*இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவை மற்ற வேண்டியது முக்கியமானது.
*சிலருக்கு சிறுநீர் பிரச்னை முற்றிய நிலையில் காணப்படும் அதனால் டயாலிசிஸ்
செய்ய வேண்டும்.
*சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அலட்சியம் காட்ட கூடாது.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

*எரிச்சல்
*சரும அரிப்பு
*உடல் வீக்கம்
*பசியின்மை
*குளிர்ச்சி உணர்வு
*சிறுநீர் கழிப்பதில் சிரமம்

சிறுநீரை சேதப்படுத்தும் உணவுகள்

ஆல்கஹால்

அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கும். சிறுநீரகங்களின் செயல்பாட்டில் சிக்கல்களை மற்றும் மூளையிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். மது சிறுநீரகத்தில் கடுமையான விளைவை ஏற்படுத்தும்.

காபி

அதிகளவு காப்ஃபைன் காபியில் உள்ளது. காப்ஃபைன் சிறுநீரகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே அதிகமாக காபி குடிப்பவர்களுக்கு சிறுநீரக கட்டிகள் வர வாய்ப்பு உண்டு. இதனால் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

உப்பு

பொட்டாசியத்துடன் இணைந்து உடலில் உள்ள திரவத்தைப் பராமரிக்கிறது. உணவில் அதிகளவு உப்பை சேர்த்து உட்கொண்டால் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் ஏற்படுத்துகிறது. எனவே சிறுநீரகங்களில் தொடர்ச்சியாக அழுத்தம் அதிகமாக கொடுக்கப்படும் போது சிறுநீரகம் சேதமடைகிறது.

மாட்டிறைச்சி

புரோட்டீன் அதிகளவு மாட்டிறைச்சியில் காணப்படுகிறது. புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இதன் வளர்சிதை மாற்றம் கடினமானது என்பதால் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. புரோட்டீன் அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி போன்ற உணவுகளை அதிகமாக உண்வது சிறுநீரக கற்களை அதிகரிக்கிறது.

செயற்கை சுவையூட்டி

கடைகளில் விற்கப்படும் இனிப்புகள், குக்கீஸ் மற்றும் பானங்கள் செயற்கை சுவையூட்டிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த செயற்கை சுவையூட்டிகள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here