சீரியல் கேரக்டர் நிஜ கதையாக பிரதிபலிப்பு! விலாசினியின் நிஜ வாழ்க்கை!

0
64
vilaasini

நடிப்பு

ஆர்ஜே, விஜே, சீரியல் நடிகை என பல திறமைகளை கொண்டவர் விலாசினி. பாவம் கணேசன் சீரியலில் சித்ரா கேரக்டரில் நடித்து பல பாராட்டுகளை பெற்றவர். கணவரின் பேச்சுக்கு அடங்கி பயந்த சுபாவம் கொண்டவராக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

நிஜ வாழ்க்கை

சீரியல் நடிகையாக உள்ள அவர் சீரியலில் உள்ளது போலவே நிஜ வாழ்க்கையில் உள்ளதாக கூறியுள்ளார். இசையமைப்பாளரான இளையராஜாவின் நெருங்கிய உறவினர் ஆவார். பாடுவதற்காக அவரது அண்ணன்களான கார்த்திக் ராஜா, பிரேம்ஜி, ஆகியோரிடம் வாய்ப்புகளை கேட்டுள்ளார்.

3pma0be8 mk

வாய்ப்பு

பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளை மட்டும் இவர் பாடியுள்ளார். வாய்ப்பு பிறகு கிடைக்காததால் ரேடியோவில் ஆர்ஜே வாக வேலைபார்த்துள்ளார். ஆதித்யா டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

நண்பர்

அவரது நண்பரின் மூலம் பாவம் கணேசன் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கணவர்

இந்த சீரியலில் வரும் கணவரை விட நிஜ வாழ்வில் உள்ள கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவரை ஏமாற்றிவிட்டார் எனவும், தற்போது விவாகரத்து பெற்று தனியாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here