சுந்தரகாண்டம் நடந்த ஸ்ரீலங்காவின் அசோகவனம்!

0
81
seethaman

சீதாமன் கோவில்

சீதாமன் கோவிலின் வெளியில் லட்சுமணன்,ராமர், சீதை, ஹனுமான் சிலைகள் உள்ளன. சீத்தாவை இந்த கோவிலில் கடத்தி வைத்திருந்ததாகவும், ஹனுமான் சீதையை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஹனுமான்

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. தை பூசத்தின் அடுத்த நாள் ஹனுமானுக்கு தேர் வைத்து பூஜை செய்கிறார்கள். ஹனுமான் உயரமாக இருப்பதாகவும் அவருடைய பாதம் இங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீதையை ஹனுமான் இங்கு சந்தித்ததாக கூறப்படுகிறது.

புகழ்

இந்த கோவிலில் தான் சீதை கைதியாக ராவணன் அடைத்து வைத்துள்ளார். ராமாயணம் தெரிந்த அனைவருக்கும் இந்த இடத்தை குறித்து தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு இந்த கோவிலில் இருந்து தான் கற்கள் கொண்டு செல்ல பட்டுள்ளன. ஸ்ரீலங்காவில் மிகவும் புகழ்பெற்ற இடமாகும்.

FotoJet 1

மூலஸ்தானம்

ராமாயணத்தின் முக்கிய பகுதியாக சுந்தரகாண்டம் சொல்லப்படுகிறது. தவ வழிபாட்டிற்கு சரியான இடத்தில் ராவணன் சீதையை சிறை வைத்துள்ளார். சீதை நீராடி தவம் செய்த இடம் தான் இங்கு சிறப்பு பெற்றுள்ளது. கோவிலின் உள்ளே ராமர், சீதை,லட்சுமண பெருமான், ஜடாயு, அனுமான் என 5 சுவாமிகள் உள்ளனர்.

ஒளி

சீதையை தேடி ஹனுமான் இலங்கை முழுவதும் தேடி பார்த்த போது ஒரு ஒளி தெரிந்து மலையில் இருந்து பார்த்துள்ளார். அந்த ஒளியை கண்டு இறங்கிய இடமாக இது உள்ளது.

வெற்றிலை

ஹனுமானை வெற்றிலை வைத்து வாழ்த்திய இடமும் இங்கு தான் உள்ளது. வெற்றிலை மாலை சார்த்தி வழிபடும் முறையை இங்கு தான் ஆரம்பித்துள்ளனர். இங்கு ஹனுமான் அவருடைய பாதத்தை பதித்து தன்னுடைய ரூபத்தை காட்டிய இடம் இங்கு உள்ளது.

மக்கள்

இந்துக்கள் அனைவரும் வந்து செல்லும் இடமாக இது உள்ளது. அனைத்து இன மக்களும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here