சுவர் இடிந்த பள்ளியில் உறுதிச்சான்றிதழ் வழங்கியதில் அலட்சியம்!

0
48
suvar

மேல்நிலைப்பள்ளி

திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் டிசம்பர் 17 அன்று கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசினர் நியமித்த குழு ஆய்வினை மேற்கொள்கிறது.

சான்றிதழ்

பள்ளிக்கூடத்தின் உறுதியை குறித்து கடந்த ஆண்டு வருவாய்த்துறை, தீயணைப்பு துறை மாநகராட்சியிடம் முறையான சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

ஆய்வு

அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் சான்றிதழ் கொடுத்துள்ளனர். சுகாதார சான்றிதழை அப்போது பதவியில் இருந்த சரோஜா அவர்கள் ஆய்வு செய்து தர வேண்டும். ஆனால் கீழ்மட்ட அதிகாரிகளே இதனை ஆய்வு செய்துள்ளனர். தற்போது சரோஜா இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திரன் தற்போது ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

வருவாய்துறை

வருவாய்துறை ஆய்வு செய்ததில் பள்ளியில் 650 மாணவர்கள் மட்டுமே படிக்கலாம் என சான்று அளித்துள்ளனர். சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பிரிவில் 1,484 பேர், ஆங்கில பிரிவில் 1,236 பேர் என மொத்தம் 2,720 பேர் பயில்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

விபத்து

தீயணைப்பு அதிகாரியும் ஆய்வினை மேற்கொள்ளாமல் சான்றிதழ் அளித்தது தெரியவந்துள்ளது. முறையாக ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்காததால் இந்த விபத்து ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here