சுவையான கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல் செய்வது எப்படி ?

0
74
பொங்கல்

தேவையான பொருட்கள்

கரும்புச்சாறு – 600 மில்லி

ஜவ்வரிசி – 160 கிராம்

நெய் – 80 மில்லி

பயத்தம்பருப்பு – 60 கிராம்

முந்திரி – 25

உலர்திராட்சை – 25

பாதாம் – 25

ஏலக்காய் – 5 [பொடிக்கவும்] .

செய்முறை

முதலில் கடா ஒன்னு எடுக்கவும் . பின் கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு . பின் ஜவ்வரிசியை நன்கு வறுத்து எடுத்து பின்னர் அதே கடாயில் பயத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு உடைத்த முந்திரி, உலர்திராட்சை, உடைத்த பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் பால், கரும்புச்சாறு சேர்த்துக் நன்கு கொதிக்கவிடவும். நன்கு கொதித்த உடன் வறுத்து வைத்துள்ள பயத்தம்பருப்பு, ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கலக்கி கொண்டு குறைந்த தீயில் வைத்து மூடவும்.

பின் அதை ஏழு நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, பொடித்த ஏலக்காய் இவற்றை நன்கு கலந்து, மீதமுள்ள நெய்யைவிட்டு மூடி, வெயிட் போட்டு, ஐந்து நிமிடங்கள் `சிம்’மில் வைத்து இறக்கினால், சுவையான கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல் தயார்.வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கலைவிட கரும்புச்சாறு பொங்கல் மிகவும் சுவையாக இருப்பதுடன், நீரழிவாளர்களுக்கும் உகந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here