Recipe in tamil 2022;சுவையான மீன் ஊறுகாய் தயார்

0
102
மீன் ஊறுகாய்

மீன் – 1/2 கிலோ[ துண்டு மீன் ]
மஞ்சள் பொடி – 1/2 கரண்டி
மிளகாய் தூள் – 4 மேஜைக்கரண்
வெந்தய பொடி – 1கரண்டி
பூண்டு – 2
இஞ்சி – சிறிய துண்டு
வினிகர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 கரண்டி
கறிவேப்பில்லை – சிறிது
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மீனை நன்கு கழுவ வேண்டும் . பின் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான உடன் கடு போடவும் . கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய இஞ்சி, பூண்டுயை நன்கு கிண்டவும். பின் அதில் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிண்டவும் .பின்பு நாம் வறுத்து வைத்த மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிண்டவும்.5 நிமிடம் ஆனதும் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழிந்த உடன் அடுப்பை அணைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் ரெடி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here