சென்னையில் கனமழை! வாகனங்களில் நீந்திய மக்கள்!

0
44
mazhai

சாலை

சென்னை,புறநகர் மாவட்டங்களில் நேற்று துவங்கிய கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அவதி.ஐந்து மணி நேரத்தில் 20செ.மீ மழை பெய்து பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் மழை நீர் ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.

மழை

போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் தொடர்ந்து நேற்றைய தினம் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று பிற்பகல் முதல் இரவு வரை இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக எம்ஆர்சி பகுதியில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

gallerye 023047302 2926103

தலைமை செயலகம்

கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தலைமை செயலகத்தில் தண்ணீர் புகுந்தது. தலைமை செயலகத்தில் இருக்கும் அறைகளை புதுப்பித்து வருகிறார்கள்.

அதிகாரிகள் கூற்று

வானிலை மையம் இது குறித்து எச்சரிக்கை விடவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். பொதுமக்கள் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், வாகனத்திலும், நடந்தும் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

புழல்,செம்பரம்பாக்கம் திறப்பு

மழை கொட்டித்தீர்த்ததால் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கத்திலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் , புழலில் வினாடிக்கு 750 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. திடீரென பெய்த மழையால் மீண்டும் நீர் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று கரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் மாறுபட்டதன் காரணமாக நேற்று கரைக்கு வந்துள்ளது. சென்னையில் மேகமூட்டம் இருந்ததால் கனமழை பெய்தது என அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here