சென்னையில் கூடுதலாக 2,500 மெகாவாட் அமைக்க பணிகள் ஏற்பாடு!

0
73
minsaaram

மின்சார வசதி

சென்னையில் உள்ள கொரட்டூர், புளியந்தோப்பு, தரமணி போன்ற இடங்களில் 1,750 கோடி செலவில் அமைக்கப்படும் நவீன துணை மின் நிலையங்களின் பணிகள் விரைவுபடுத்த உள்ளன. இதன் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரம் கையாள வசதி கிடைக்க உள்ளது.

மின் விநியோகம்

400 கிலோ வோல்ட் மின்சாரம் 230,110 கிலோ வோல்ட் திறன் உடைய மின் நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டு உயரழுத்தம் குறைக்கப்பட உள்ளது. இறுதியாக 11 கிலோ வோல்ட் திறன் உடைய பீடர் மின் தடங்கள் வாயிலாக நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம்

400 கிலோ வோல்ட் திறனில் காஞ்சிபுரத்தில் துணை மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்களுக்கு பல மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் வருகிறது. அங்கிருந்து துணைமின் நிலையங்கள் வாயிலாக அங்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அனல் மின் நிலையம்

சென்னையில் கோடை காலங்களில் 3,000 மெகா வாட்டை தாண்டுகிறது. இந்த நிலையை பூர்த்தி செய்ய சிறப்பு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

400 கிலோ வோல்ட்

கூடுதல் மின்சாரத்தை கையாளுவதற்காக 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆய்வு

மொத்தமாக இந்த திட்டத்தின் செலவு 1,750 கோடி ரூபாய் ஆகும். இதனை மின் வாரிய தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

அதிகாரி கூற்று

சென்னையில் துணைமின் நிலையங்களை அமைப்பதால் மின் இழப்புகள் வெகுவாக குறையும். கிண்டியில் பணிகள் முடிந்ததாகவும், புளியந்தோப்பில் 90 சதவீதமும், தரமணியில் 70 சதவீதமும், கொரட்டூரில் 50 சதவீதமும் பணிகள் முடிவடைந்துள்ள என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here