சேதுபந்தாசனம் ஏன் ? செய்ய வேண்டும் ; இதனால் ஏற்படும் நன்மைகள் ??

0
102
yoga-

ஏக பாத சேதுபந்தாசனம் செய்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆகியாவை தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக நிலையான தன்மை, படைப்பாற்றல், அன்பு ஆகியவை வளர்கிறது.

ஒன்னு லெஃகேட் பிரிட்ஜ் போஸ்

வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இதில் ஒரு காலை உயர்த்தி சேதுபந்தாசனம் செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஒன்னு லெஃகேட் பிரிட்ஜ் போஸ் என்று அழைக்கப்படுகிறது.

சேதுபந்தாசனம்

ஏக பாத சேதுபந்தாசனம் செய்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆகியவை தூண்டப்படுகின்றன.

சேதுபந்தாசனம் செய்யும் முறை

*பாய் விரிப்பில் படுக்கவும்.
*இரண்டு பாதங்களை கால் மடக்கி தரையில் வைக்கவும்.
*கணுக்கால் மூட்டுகள் நேராய் கீழே இருக்க வேண்டும்.
*கைகளை நீட்டி வைக்க வேண்டும்.
*மூச்சை உள்ளிழுத்தவாறு வைத்து கொண்டு கைகளையும் பாதங்களையும் தரையில் அழுத்தி இடுப்பை மேலே உயர்த்தவும்.
*தோள்கள் விரிந்து காணப்பட வேண்டும்.
*இடுப்பை தரையின் கீழ் வைத்து கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.
*இடது பாதத்தை தரையில் ஊன்றி மூச்சை வெளியேற்றி வலது காலை மடிக்கவும்.
*மூச்சை உள்ளெழுத்து கொண்டு வலது காலை மேலே உயர்த்தவும்.
*30 நிமிடம் வரை இந்நிலையில் இருந்து விட்டு பின் வலது காலை மடித்து தரையில் வைத்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
*தோள் மற்றும் கழுத்தில் ப்ரோப்லேம் உள்ளவர்கள் இதை தடுக்கவும்.

இதனால் ஏற்படும் பலன்கள்

*முதுகு தண்டை நேராக இருக்க செய்கிறது.
*முதுகில் உள்ள தசைகளை உறுதியாக்குகிறது.
*முதுகு வலியை நீக்குகிறது.
*தோள்களை பலப்படுத்துகிறது.
*சேதுபந்தாசனம் செய்வதால் தைராய்டு சுரபிக்கு நன்மை அதிகரிக்கிறது.
*நுரையீரலை பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை சரி செய்கிறது.
*இருதயத்தை பாதுகாக்கிறது.
*ஆற்றலை உடலுக்கு அளிக்கிறது.
*இடுப்பின் நெழிவு தன்மையை அதிகரிக்கிறது.
*வயிற்றுக்குள் உள்ள பிரச்சனையை போக்குகிறது.
*சோர்வை போக்குகிறது.
*தலைவலியை போக்க உதவுகிறது.
*கால் தசையை பலப்படுத்துகிறது.
*உடலின் சோர்வை போக்குகிறது.
*தூக்கமின்மையைப் போக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here