சேஷாத்ரி சுவாமிகள்!!!

0
115
sosthiri

நினைத்த உடனே முக்தி தரும் திருவண்ணாமலையில் பிரகாசிக்கும் ஞான ஜோதியில் கலந்துள்ள மகான்களில் முக்கியமானவர் சேஷாத்ரி சுவாமிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் பிறந்த அவர் தான் பிறந்த ஊரில் அவருக்கான மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 23 ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.

தங்கங் கை சேஷாத்ரி

மரகதம்மா வீடு காஞ்சிபுரத்தில் உள்ளது. அவருக்கு நான்கு வயது இருக்கும் போது தாயார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கடையின் வாசலில் சாமி சிலைகள் விற்கும் கடை இருந்தது. அதில் இருந்த கிருஷ்ணர் பொம்மை மீது ஆசைப்பட்டு சேஷாத்ரி எடுத்தார். கிருஷ்ணர் பொம்மையை குழந்தைக்கு பணம்வாங்காமல் கொடுத்தார். அதிசயமாக பல நாள் விற்க வேண்டிய சாமி சிலைகள் அன்று ஒரே நாள் மாலைக்குள் விற்றுத் தீர்ந்தது. மறுநாள் கோவிலுக்கு போகும் போது உங்கள் மகனின் ராசியால் ஒரே நாளில் வியாபாரம் நடந்தது. ‛தங்கக் கை சேஷாத்ரி’ என்றார். அதன் பிறகு அவர் ‛தங்கங் கை சேஷாத்ரி’ என்றும் அழைக்கப்பட்டார்.

சொற்பொழிவு

அவரது தந்தை மரணம் அடைந்த பிறகு மீண்டும் வழூருக்கு தாயுடன் வந்தார். சேஷாத்ரி இளம் பருவத்திலேயே தனது தாத்தா காமகோடி சாஸ்திரியிடம் வேத ஞான விஷயங்களை கற்றுத் கொண்டார். இவர் பதினான்கு வயதிலேயே ராமாயணம் , இதிகாசங்களில் சொற்பொழிவு நிகழ்த்தினார் . சேஷாத்ரி பெரும்பாலும் கோவில்களில் தான் இருந்தார். கோவில்களைத் தான் சுற்றி வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க ஜோசியரை அணுகியபோது அவர் திருமணம் செய்யமாட்டான் என்றும் சன்னியாசியாக ஒரு ஞானப்பிறவி என்றும் கூறிவிட்டார். அவரது தாய் மரணிக்கும் போது சேஷாத்ரியின் மடியில் சாய்ந்து ‛அருணாசலா’ என்று மூன்று முறை கூறி உயிரைவிட்டார்.

பித்தன்

பசி துக்கம் ஒன்றும் இல்லாமல் எந்நேரமும் தியானத்திலேயே இருந்தார். மயானம் கோவில் என்று வேறுபாடுகள் இல்லாமல் பித்தன் போல சுற்றிவந்தார். அவரது தந்தையின் நினைவு நாளன்று அழைத்த போது நான் ஒரு சன்னியாசி இது போன்ற பந்தம் எனக்கு கிடையாது என்று மறுத்தார். இதனால் கோவம் கொண்ட உறவினர்கள் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சிறிது கழிந்து அறையைத் திறந்த போது சோஷத்திரி சுவாமிகள் இல்லை.
அறை எங்கும் சந்தன விபூதி வாசனை அப்போது தான் புரிந்தது சோஷத்திரி மனிதன் அல்ல மகான் என்று.

பாதயாத்திரை

பிறகு அவரை அந்த கோவிலில் பார்த்தேன் இந்தக் கோவிலில் பார்த்தேன் என்று பலரும் சொல்ல தொடங்கின. அவரும் பாதயாத்திரையாகவே பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். பின்னர் கடைசியாக தான் அடைய நினைத்த திருவண்ணாமலையை வந்தடைந்தார்.

கிரிவலப் பாதை

திருவண்ணாமலையில் இவர் சாப்பிடுவதையும் தூங்குவதையும் யாரும் பார்த்தது இல்லை. நான் அம்பாள் நீ என் மகன் முருகப்பெருமான் உனக்கு எதுவும் நடக்காது என்றார். பக்தர்கள் இன்னும் அப்படித்தான் இருவரையும் வணங்கி வருகின்றனர்.

சாம்பாரில் செத்த பாம்பு

அவரை அழைக்காத திருமணத்திற்கு சென்றவர் நேராக சமையல் கூடத்திற்கு சென்று அண்டாவில் இருந்த சாம்பாரை கொட்டிவிட்டார். திருமணவீட்டில் உள்ளவர்கள் கோபத்துடன் அவரை நெருங்கி வந்த போது கொட்டிக்கிடந்த சாம்பாரில் செத்த பாம்பு இருப்பதை காட்டினார். கோபத்துடன் வந்தவர்கள் அவரது காலில் விழுந்து எங்களது உயிரை காப்பாறிய தெய்வமே என்று வணங்கினர்.

சேஷாத்திரி

குளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது உடன் குளிப்பவர்கள் யார் மீதாவது தண்ணீரை தெளிப்பார். உடனே சுமந்திருந்த உடல்,மனக்காயங்கள் ஆறும்
இவரது தொண்டராகிவிடுவர்.

நாகப்பாம்பு

நீருக்கடியில் நீண்ட நேரம் இருப்பார்; கேட்டால் தண்ணீருக்குள் கிருஷ்ணனுடன் விளையாடி கொண்டிருக்கிறேன் என்பார். இவர் தியானத்தில் இருக்கும் போது பெரிய நாகப்பாம்பு வர பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பாம்பு சேஷாத்ரியின் தலையில் ஏறி சிறிது நேரம் படமெடுத்து ஆடிவிட்டு திரும்பச் சென்றது. இதனை பார்த்த பக்தர்கள் திகைத்தனர். ஆனால் இது எதுவுமே தெரியாத சேஷாத்திரி சுவாமிகள் புன்னகையுடன் தியானத்தில் இருந்து எழுந்தார்.

ஆஸ்ரமம்

கோவிலில் தியானம் செய்து கொண்டிருகும் போது இவர் இருப்பது தெரியாமல் கோவிலை மூடிவிட்டனர். மறுநாள் காலை கோவில் கதவைத்திறந்த போது சேஷாத்திரியாகவும் சிவானகவும் மாறி மாறி அவர் காட்சி தந்தார். 1929 ம் ஆண்டு ஜனவரி 4 ம்தேதி தனது 59 வது வயதில் மரணம் அடைந்தார். ஆலோசனைப்படி காஞ்சியில் சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த வீட்டை அவரது பக்தர்கள் வாங்கின.

மணிமண்டபம்

அந்த வீட்டில் வைப்பதற்கு சேஷாத்ரி சுவாமிகளின் படத்தை பெரியவரிடம் காண்பித்து ஆசிர்வாதம் செய்யக் கேட்ட போது இந்த மகானைப் போல வருவேனா? இப்படி பெரியவரை குறிப்பிட்டு பேசிய மகானான சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த காஞ்சிபுரத்தில் அவருக்கு ஒரு நினைவு சின்னம் இருக்கிறது.

வழூர் கிராமம்

காஞ்சிபுரம் மணிமண்டபத்தில் இருந்து 40 கிலோ துாரத்தில் இருந்து 25 கிலோ துாரத்தில் இருந்து 12 கிலோ துாரத்தில் உள்ளது. மேல்மருவத்துாரில் இருந்து வந்தவாசி செல்லும் பஸ் மருதநாடு என்ற இடத்தில் இருந்து 3 கிலோ துாரத்தில் வழூர் கிராமம் உள்ளது.

முழு விவரம்

இது குறித்து கூடுதல் விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வழூர் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி சுப்பிரமணியன்: 98400 53289.
-எல்.முருகராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here