சோனியா அகர்வால் பள்ளியில் படித்த போது நடந்த சம்பவம்

0
52

பள்ளியில் படித்தபோது தன்னை கிண்டல் செய்த மாணவனை கன்னத்தில் அறைந்துள்ளதாக நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

கிரான்மா படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் கூறியது

கிராண்மா படத்தில் நான் ஆசிரியையாக நடித்துள்ளதாகவும், பல படங்களில்
நான் சாதுவாக நடித்திருப்பதாகவும், நிஜத்தில் மிகவும் துணிச்சலானவள் என்றும் தெரிவித்துள்ளார்.

காரில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தனியாக செல்கிறேன் என்றும், காரை நானே ஓட்டுவேன் என்றும், யாருக்கும் பயம் இல்லை என்றும் அவர் கூறினார். பள்ளியில் படித்த போது அவரை கிண்டல் செய்த பையனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலானவள் என்பதை நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.

அவருடைய தாய்மொழி பஞ்சாபி என கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழியில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.

எனக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றும், இதுவரை சொந்த குரலில் பாடி நடித்தது இல்லை என்றும், அடுத்து ஒரு படத்தில் பாடகியாக நடிக்க ஆசை படுவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here