ஜீ தமிழில் நடுவராகும் ஸ்டார் சேனல் சீரியல் ஹீரோ!

0
49
samuktha senthil

ஜீ தமிழ்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக் பாஸ் புகழ் சம்யுக்தா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ஹீரோ செந்தில் இவர்கள் இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்

2016 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இதில் கலாட்டா, காமெடி, ஆட்டம், என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடுவர்கள்

பாக்யராஜ், குஷ்பு, அர்ச்சனா,ஆகியோர் முதல் சீசனில் நடுவராக பங்கேற்றனர். பாக்யராஜ், ரோஜா, அர்ச்சனா, ஆகியோர் இரண்டாம் சீசனில் நடுவராக இருந்தனர். பாக்யராஜ், தேவையானி, ரக்ஷிதா லெட்சுமி ஆகியோர் மூன்றாம் சீசனில் நடுவராக இருந்தனர்.

நான்காவது சீசன் ஜூனியர் சூப்பர் ஸ்டார்

நான்காவது சீசனில் நடுவர்களாக விஜய் தொலைகாட்சியின் பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் ஆர்ஜே செந்தில், சினிமா நடிகை சினேகா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தனா சாந்தனு தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 26 ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here