டாப் 10 லிஸ்டில் நயன்தாரா பெயர் இல்லாதது ஏன்? – அதிர்ச்சியான ரசிகர்கள்!

0
74
top 10 actress

அதிகம் பதிவிடப்பட்ட தென்னிந்திய நடிகைகள் லிஸ்டை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்டில் நயன்தாரா பெயர் இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டாப் 10 லிஸ்ட்

டிசம்பர் மாதத்தில் அந்த ஆண்டு முழுவதும் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம். முதல் இடம் பிடித்த நடிகைகளின் லிஸ்டை தற்போது வெளியிட்டுள்ளது.

முதல் இடம்

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தை பெற்றுள்ளார். அண்ணாத்த திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் அதிகம் பேசப்பட்ட பட்டியலில் முதலில் வந்துள்ளார்.

இரண்டாம் இடம்

டுவிட்டரில் அதிகம் பேசப்படும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் 2 வது இடத்தை விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே பிடித்துள்ளார்.

மூன்றாம் இடம்

விவாகரத்து சர்ச்சையில் சிக்கி அதிகம் பேசப்பட்ட சமந்தா 3 வது இடத்தை பிடித்துள்ளார். 4ம் இடத்தை காஜல் அகர்வால் பெற்றுள்ளார். 5வது இடத்தை அறிமுக நடிகை மாளவிகா பிடித்துள்ளார். 6ம் இடத்தை ராகுல் ப்ரீத்தியும், 7,8 வது இடத்தை சாய்பல்லவி, தமன்னா பெற்றுள்ளனர். அனுஷ்கா ஷெட்டி 9 வது இடத்தை பெற்றுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் 10ம் இடத்தை பிடித்துள்ளார்.

நயன்தாரா பெயர் இல்லை

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் பெயர் டாப் 10 லிஸ்ட் டுவிட்டரில் இல்லாதது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. நயன்தாரா நடித்த நெற்றிக்கண், அண்ணாத்த வெளியான நிலையில் அவர் பெயர் இல்லாதது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here