தக்காளி வரத்து குறைந்து மீண்டும் உயர்ந்துள்ள தக்காளி விலை!

0
76
tomatto

மழை

ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

விலை

கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டதால் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. தக்காளியின் விலை கடந்த மாதம் அதிகரித்த நிலையில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ 150 வரை விற்பனையானது.

சில நாட்களுக்கு முன்பு

மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநிலங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை படிப்படியாக குறைந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனை கடைகளில் ரூ 35-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது.

அதிகரிப்பு

திங்கள்கிழமை 40 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்ததால் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் தக்காளி 70 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 80 ரூபாய்க்கும்,பிற பகுதிகளில் உள்ள கடைகளில் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வியாபாரிகள் கூற்று

கடந்த வாரம் வட மாநிலங்ககளிலிருந்து தினமும் 70க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்ததால் தக்காளி விலை குறைந்தது. தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், மொத்த விற்பனையில் ரூ 480 க்கு விற்கப்பட்ட தக்காளி இரு மடங்கு அதிகரித்து தற்போது 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here