தடுப்பூசி திட்டத்தை இயக்கமாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடி..!

0
63
modi

திட்டம்

கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை இயக்கமாக மாற்ற வலியுறுத்தினார்.

பாராட்டு

15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி 31 சதவீதம் செலுத்தப்பட்டிருப்பதை பிரதமர் பாராட்டினார். டெல்டா வகை கொரோனா தொற்றுடன் உருமாறிய ஓமைக்ரான் வகையும் வேகமாக பரவி வருகிறது.

ஆலோசனை

கொரோனா தொற்று சூழல் குறித்து அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் அதிகமாக கொரோனா காணப்படும் மாநிலங்கள், மாவட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

மோடி கூறியவை:

மாவட்ட அளவிலான மருத்துவ கட்டமைப்புகளை விரைந்து வலுப்படுத்த வேண்டும் என்றும், பரிசோதனை, தடுப்பூசி, ஆய்வு உள்ளிட்டவை தொடர்பான ஆராய்ச்சியை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

சேவைகள்

இணையவழி மருத்துவ ஆலோசனைகளும் சேவைகளும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும், கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் தடை ஏற்பட கூடாது என அவர் கூறினார்.

இயக்கம்

கொரோனா பரவல் குறித்து அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் 3 ஆவது தவணை தடுப்பூசி திட்டம் இயக்கமாக மாற வேண்டும் என அவர் கூறினார்.

முதல்வருடன் ஆலோசனை

மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் 15-18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை முதல் முதியோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தேர்தல்

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. பொதுக்கூட்டங்களை நடத்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here