தடைகள் இல்லாமல் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

0
68
laari

அனுமதி சீட்டு

உடுமலை வருவாய் கோட்டம், கிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கல் குவாரிகள், ஜல்லிக்கற்கள் போன்றவை கேரள மாநிலத்திற்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இவைகள் ஏற்றப்படும் லாரிகளில் கனிம வளத்துறையால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும். பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆவணங்கள்

அரசிடமிருந்து அனுமதி பெற்று கனிம வளத்துறை அனுமதி சீட்டு, கட்டணம் செலுத்திய சீட்டு, உரிமம் பெற்ற சான்று, வரி செலுத்திய ரசீது போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

பணிகள்

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து சட்ட விரோதமாகவும், ஆவணங்கள் இல்லாமலும் தினமும் லாரிகளில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

சோதனை சாவடிகள்

இந்த கனிம வளங்களை ஒன்பதாரு போலீஸ் சாவடி, உடுமலை, அமராவதி வனசக்கரங்களின் சோதனை சாவடிகளை தாண்டி கொண்டு செல்கிறார்கள்.

புகார்

இதனை தடுக்க பொதுமக்கள் தரப்பிலும், லாரி உரிமையாளர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

3 லாரிகள்

பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி நேற்று கேரளாவிற்கு சென்ற மூன்று லாரிகளை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.

கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றும் பிடித்த மூன்று லாரிகளை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தாசில்தார் கூறினார்.

நடவடிக்கை

இதனை பற்றி புகார் தெரிவித்தும் போலீஸ் ,அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. லாரிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்த பிறகும் மாலை வரை இழுத்தடித்து வந்தனர். கனிம வளம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here