தமிழ் படிக்க ரெடியாகும் அல்லு அர்ஜுன் – அல்லு அர்ஜுனின் தமிழ் ஆசை!

0
96
allu arjun

இந்திய படம்

தெலுங்கு நடிகர்களுக்கு தமிழின் மீது , தமிழ் நடிகர்களுக்கு தெலிங்கின் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. தமிழ் ரசிகர்களை கவர்ந்திட வேண்டும் என தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் புஷ்பா படத்தை இந்தியா படமாக வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் , தாணு,தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அல்லு அர்ஜுன் விழாவில் பேசியது

தமிழ்நாட்டில் பிறந்து 20 வயது வரை தமிழ் நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ் நாட்டிற்கு வரவேண்டும் என இத்தனை நாட்களாக காத்திருந்தேன்.நான் தமிழ் தப்பாக பேசினாலும், தமிழ் பேசினால் தான் அழகாக இருக்கும். செம்மர கடத்தலின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அரசியல் ஒன்றும் இல்லை. இந்த படம் நன்றாக வரவேண்டும் என நான் டப்பிங் பேசவில்லை என அல்லு அர்ஜுன் கூறினார்.

சாமி சாமி பாடல் வெற்றி

சாமி சாமி பாடல் வெற்றி பெற தேவி ஸ்ரீ பிரசாத் தான் காரணம் என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். சாமி சாமி பாடல் வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
மக்கள் புஷ்பா படத்தை பார்க்க வேண்டும் என காத்திருக்கிறேன் என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். தமிழில் படம் செய்யவேண்டும். தமிழ் படம் நடிக்க ரெடி ” என அல்லு அர்ஜுன் குறிப்பிடுகிறார்.

செய்தியாளர்கள் கேள்வி

தமிழ் நடிகர்களில் யார் அழகாக ஆடுகிறார்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அல்லு அர்ஜுன் ”கமல் ,விஜய் ,தனுஷ் , அனைவரும் அழகாக ஆடுகிறார்கள். சிவகார்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கு பிடித்தது. சிவகார்திகேயனுக்கு வாழ்த்துக்கள் கூறினார் அல்லு அர்ஜுன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here