மஹிந்திரா ஸ்கார்பியோவை வாங்கி புகழாரம் சூட்டிய வெளிநாட்டு போலீஸ்!

0
62
மஹிந்திரா

அடையாளம்

ஆட்டோமொபைல் துறையில் இந்திய தயாரிப்பு வாகனங்களுக்கு என்றே தனி மதிப்பு உள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்திய தயாரிப்புகளுக்கு அடையாளங்களாக உள்ளது. சோதனைகளில் முழு ஸ்டார்களையும் பெற்றதே இதற்கு காரணமாகும்.

டுவிட்டர் பதிவு

gallerye 045928867 29300448

நைரோபி நகர போலீசாருக்கு வழங்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சிங்கிள் கேப் பிக்கப் வாகனங்களை காணலாம். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைரோபியின் போக்குவரத்து போலீசாருக்கு மொத்தம் 100 யூனிட் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ஆனந்த் மஹிந்திராவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்

மஹிந்திரா ஸ்கார்பியோ ட்ரக் ஆனது மிகுந்த ஆற்றல்மிக்க வாகனமாகவும், ஹேண்ட்லிங் செய்ய மிகவும் எளிமையாகவும், சாலைகளில் இயக்க சிரமம் இல்லாமலும் இருக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

படங்கள்

ஆனந்த் மஹிந்திரா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட படங்களில் போலீசார் துறைக்கு உண்டான பெயிண்டில் இருப்பதை காண முடிகிறது. இந்த வாகனங்கள் அடர் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதிகளில் சிவப்பு, மஞ்சள் நிறங்களையும், ஓட்டுனரின் கேபின் வெள்ளை நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

gallerye 045928867 293004411

குத்தகை

கேபினுக்கு பின்னால் பயணிகளை அழைத்து செல்ல மென்மையான மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு இந்த வாகனங்களை குத்தகைக்கு மட்டும் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரி ஒருவர் புதிய வாகனங்களை பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக கருத்தினை தெரிவித்தார்.

உறுதி

மஹிந்திரா ஒரு உறுதியான வாகனம் என்றும், சேவை செய்ய எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.

எஞ்சின்

இந்த வாகனங்கள் இரண்டு விதமான வடிவங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எம்ஹாவ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ டீசல் எஞ்சின் உடன் 6- ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

விலை

இதன் எக்ஸ் -ஸோரூம் விலை ரூ6.80 லட்சம் முதல் ரூ 7.76 லட்சம் வரை உள்ளன.ஸ்டாண்டர்ட் ஸ்கார்பியோ எஸ்யூவி மாடல் விலை ரூ 12லட்சங்களில் இருந்து ரூ 16 லட்சங்கள் வரை விற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here