தலைவலி உடல்சோர்வை ஏற்படுத்தும் ஓமிக்ரான் வைரஸ்

0
75

நியூயார்க்கிற்கும் பரவியது

இதுவரை 30 நாடுகளுக்கு ஓமிக்ரான் வகை கொரோனா கிருமி பரவியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா, கொலராடோ, மினிசோட்டா ஆகிய மாநிலங்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நியூயார்கிற்கும் தற்போது ஓமிக்ரான் பரவியுள்ளது. அந்நாட்டு சுகாதாரத்துறை நியூயார்க்கில் 5 பேருக்கு வைரஸ் பரவியிருப்பதாக தெரிவித்துள்ளது.

வேகமாக பரவும் வைரஸ்

உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது ஓமிக்ரான் வைரஸ். இந்த நோய் பற்றியும் அறிகுறிகள் பற்றியும் விளக்கம் அளித்துள்ள ஏஞ்சலிக் கோட்ஸி, நவம்பர் 18 ஆம் தேதி முதல் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உடனடியாக உயரத் தொடங்கவில்லை. இந்த வாரம் அவை உயரத் தொடங்கின, அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இது வேகமாகப் பரவும் வைரஸ் என்பதை அறிந்துள்ளனர்.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும். இளம் வயது, இணைநோய்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு அறிகுறிகள் லேசாக தான் உள்ளது. ஆரம்ப கட்ட நிலையில் உள்ள பாதிப்பை விட குறைவாகத்தான் உள்ளது.

அறிகுறிகள்

இந்த வைரஸின் மூலம் உடல் நிலை சோர்வாக இருக்கும். உடல்வலி, தலைவலி போன்றவை காணப்படும். வாசனையின்மை, சுவைஇழப்பு , கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. இந்த வைரசை பற்றி பயம் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here