தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை – கீர்த்தி சுரேஷ் தகவல்

0
78
vijay

66-வது திரைப்படம்

விஜய்யுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ள விஜய் அடுத்ததாக தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல் வெள்ளியாகியுள்ளது.

செய்தி

இந்த படத்தில் விஜய் நடிப்பது குறித்து தயாரிப்பாளர் தில்ராஜு அறிவித்தார். கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் செய்திகள் மீடியாக்களில் வெளியாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் பேட்டி

தெலுங்கு மீடியா ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜய்யின் 66வது படத்தில் ஜோடியாக நடிக்கிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். நான் விஜய்யின் புதிய படத்தில் நடிக்கவில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here