தவறான இனப்பெருக்க சிகிச்சை மையங்களை கண்காணிக்கும் மசோதா

0
41

நேற்று லோக்சபாவில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மருத்துவ மையங்களை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க மசோதா நிறைவேறியது.

குற்றச்சாட்டு

மாற்று வழியில் குழந்தை பேறு இல்லாத பெண்களை கருத்தரிக்க செய்யும் இனப்பெருக்க தொழில்நுட்ப மருத்துவ மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.இனப்பெருக்க மருத்துவ மையங்கள் பல முறையான அனுமதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசின் திட்டம்

மத்திய அரசானது இனப்பெருக்க தொலில்நுட்ப சிகிச்சை மையங்களை ஒழுங்குபடுத்த திட்டமிட்டது. அதன் அடிப்படையில் லோக்சபாவில் கடந்த ஆண்டு உதவி இனப் பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தவறை தடுக்கும்

உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிக்கவும், மகப்பேறுக்கான சிகிச்சையை முறையாக்கவும், பாதுகாப்பானதாக செய்யவும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் மசோதா வழி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here