திடீர் முடிவை எடுத்த மாருதி சுஸுகி!

0
69
maaruthi

அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெட்ரோல்,டீசல் கார்களை நிறுத்த முடிவு செய்து வந்தது. இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் எலக்ட்ரிக் கார், பைக் உற்பத்தியை துவங்கினாலும் விற்பனை நிறுத்தம் குறித்து அறிவிப்புகளை வெளியிடவில்லை.

அறிவிப்பு

ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 2030 ம் ஆண்டுக்குள் பெட்ரோல் கார் உற்பத்தியை மொத்தமாக நிறுத்திவிடுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து மாருதி சுஸுகி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இயற்கை எரிவாயு

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னோடியாக இருக்கும் இந்த நிறுவனம் டீசல் கார் உற்பத்தியை விரைவில் நிறுத்திவிட்டு எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதிகாரபூர்வ உத்தரவு

பெட்ரோல், டீசல் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க எரிபொருளில் இயங்கும் பிளக்ஸ் இஞ்சின் மூலம் இயங்கும் கார்களை தயாரிக்க வேண்டும் என்பதற்கான அதிகாரபூர்வ உத்தரவு வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மாற்றம்

எரிபொருளில் இயங்கும் வாகனத்தை மாற்ற தீவிரமாக இருக்கும் நிலையில் இந்த நிறுவனத்தின் அறிவிப்பு சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

திட்டங்கள்

இந்த அறிவிப்பின் மூலம் பிரீஸா எஸ்யூவி டீசல் கார் திட்டம், சிறிய ரக டீசல் கார் போன்ற முக்கியமான திட்டங்களை கைவிட்டு உள்ளது. 2 வருடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

இலக்கு

இந்த முடிவு நிறுவனத்தின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.2024 மார்ச் மாதத்திற்குள் நான்கில் ஒரு பங்கு சிஎன்ஜி வாகனங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பாதிப்பு

மின்சார பற்றாக்குறை காரணத்தால் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இந்தியாவை பாதிக்கலாம். அரசு, நிறுவனங்கள் மாற்று எரிபொருளில் இயங்கும் உற்பத்தியை ஆதரித்து வருகிறது.

கருத்து

இந்தியாவில் உபரி மின்சாரம் உருவாகும் போது இந்த உற்பத்தியை அதிகரிப்பது சரியாக இருக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here