திருடனுக்கு கடிதம் எழுதிய வக்கீலா?

0
47
பீரோ

கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் எனும் இடத்தை சேர்ந்தவர் காட்வின் சாத்ராக், இவர் வயது 38; வழக்கறிஞர். இவரது வீட்டில் 2018 அக்டோபர் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது . இது குறித்து வழக்கில் விசாரித்த சேலையூர் போலீசாருக்கு திருட்டில் ஈடுபட்டவரின் கைரேகை அவரின் முகம் பதிவாகிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தன.

ஜான்பால்

மீண்டும் 2019 நவம்பரில் இவரது வீட்டில் பக்கத்தில் உள்ள ஜான்பால் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து அவரது வீட்டில் இருந்து அரை சவரன் மோதிரம் திருடப்பட்டது. இதில் திருடனின் முகம் பதிவாகின கைரேகைகளும் கிடைத்தது. ஆனால் இன்று வரை இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டவரை பிடிக்கமுடியவில்லை .

காட்வின் சாத்ராக்

காட்வின் சாத்ராக் கடந்த 28ம் தேதி அவர் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு செல்லும் முன் தினம் வீட்டு பீரோவில் தம்பி பீரோவை உடைக்காதே எப்படியும் உன்னை போலீசார் பிடிக்கமாட்டார்கள். சேதாரம் ஒன்னும் செய்துவிடாதே என திருடனுக்கு கடிதம் எழுதி அதை பீரோவில் ஒட்டி விட்டு சென்றார். இணையங்களில் ,வலைதளங்களிலும் பரவி வருகிறது.

கடிதம்

இரண்டு முறை திருட்டு நடந்த பின்னும் 2020ம் ஆண்டு ஊருக்கு செல்லும் முன் தினம் சேலையூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பதற்காக கடிதம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வீட்டில் விலை உயர்ந்த பொருள் இல்லை என எழுதி கொடுக்குமாறு கூறினர். அதான் இந்த முறை போலீசாரை நம்பாமல் இந்த முடிவுக்கு வந்தேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here