திருப்பதி ஏழுமலையானை வழிபட டிக்கெட் இணையத்தில் இன்று வெளியீடு!

0
78
thirupathi

இன்று

திருப்பதி ஏழுமலையானை வழிபட ஜனவரி மாத ரூ.300 தரிசன டிக்கெட் இன்று 9 மணியளவில் தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது.

டிக்கெட் வெளியீடு

ஜனவரி 1முதல் 12 வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்காக 13 முதல் 22 வரை 20 ஆயிரம் ரூபாய் 300 டிக்கெட்களும் 23 ம் தேதி முதல் 31 வரை 12 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படுகிறது.

வழங்கப்படும் இடம்

ஏற்கனவே 10 ஆயிரம் இலவச டிக்கெட்கள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி முதல் 5 ஆயிரம் இலவச டிக்கெட் ஆன்லைன்களிலும், 5 ஆயிரம் நேரடியாகவும் வழங்கப்படுகிறது.

கவுண்டர்கள்

பக்தர்களின் வசதிக்காக பஸ் நிலையம் அருகில் 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளன. நேரடியாக வரும் 30 ம் தேதி இலவச தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது.

அறைகள்

வரும் 26 ம் தேதி 5,500 நித்ய சேவை டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.27 அன்று வாடகை அறைகள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஜனவரி 11 முதல் 14 வரை நேரடியாக மட்டுமே அறைகளை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய டிக்கெட்கள்

மழை காரணமாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் ஜனவரி முதல் ஜூலை மாதம் 10 வரை பழைய டிக்கெட்டுகள் எண் மூலம் ஆன்லைனில் புதிய டிக்கெட்களை பெற்று தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here