திருமணத்திற்கு மறுப்பது மோசடியாகாது என ஐகோர்ட் தீர்ப்பு!

0
49
theerpu

மனு தாக்கல்

மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தெரிந்த ஒருவருடன் நன்கு பழகி உடலுறவும் வைத்து கொண்டு திருமணம் செய்ய மறுக்கிறார் என 1996ல் மனு தாக்கல் செய்தார்.

தீர்ப்பு

மூன்று ஆண்டுகள் விசாரித்த நீதிமன்றம் அவர் மோசடி செய்ததாக ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பில் கூறப்பட்டது

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பழக்கமாகி உடல் உறவை வைத்துள்ளனர். இந்த பெண் அளித்த சாட்சி படி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உடலுறவு வைத்தது எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

குற்றம் இல்லை

மூன்று ஆண்டுகளில் பலமுறை உடலுறவு வைத்த நேரத்தில் இந்த நபர் திருமணம் செய்வதை தவிர்க்க முயற்சித்ததாக தகவல் எதுவும் இல்லை. தவறாக புரிந்து உடலுறவுக்கு சம்மதித்ததாக பெண் கூறவில்லை. திருமணம் செய்ய மறுத்தது ஒரு குற்றம் இல்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here