திருமண வயதுகள் எதிர்ப்பு! பெண்களின் திருமண வயது அதிகரிப்பு

0
77
therumanam

பெண்களின் திருமண வயது

ஆண்களின் திருமண வயதை போல பெண்களின் திருமண வயதையும் 18லிருந்து 21 ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதன் காரணமாக பாராளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டடுள்ளன.

கடும் எதிர்ப்பு

18 வயது முழுமையடைந்த பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் சுதந்திரத்தை பறிப்பதாக காங் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே காங்., – கம்யூ., – சமாஜ்வாதி ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம்

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் , பெண்களின் திருமண வயது பாராளுமன்ற பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை நடப்பு பாராளு குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது சிவசேனா எம்.பி.க்கள் ‘சஸ்பெண்ட்’ பிரச்னையால் பாராளுமன்ற அலுவலர்கள் ஸ்தம்பித்து உள்ளன.

வட்டாரம்

கூட்டத்தொடர் முடிய இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. ஆனால் அதற்குள் பெண்களின் திருமண வயது மசோதாவை தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என பார்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here