தீரன் பட பாணியில் கொள்ளை! 4 பேர் கைது!

0
43
theeran

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு அருகே வசிப்பவர் ரஞ்சிதம்மாள் வயது 76. கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகள்கள் சுதா, லதா பேரன்கள் புஸ்கரன், கிரண் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கொள்ளை

வெள்ளிக்கிழமை இரவு கிரண் வேலைக்கு சென்றுள்ளார். நள்ளிரவு தீடீரென வீட்டின் கதவை தட்டும் சப்தம் கேட்டுள்ளது. புஷ்கரன் கதவை திறந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கத்தியால் புஷ்கரனை தாக்கியுள்ளனர். அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த லதா, சுதா கூச்சலிட்டனர். இரு பெண்களையும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரஞ்சித்தம்மாளை அவர்கள் கத்தியால் தாக்கி உள்ளனர்.

நகைகள்

பெண்கள் காதுகளில் அணிந்திருந்த நகைகள், தங்க சங்கிலி போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மொத்தம் 10 சவரன் நகை, 20,000 ரூபாய், 3 மொபைல் கொள்ளை போனது.

மருத்துவமனை

பலத்த காயமடைந்த புஷ்கரன் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

துப்பாக்கி

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 5 பேர் இருக்கலாம் மற்றும் அவர்கள் பயன்படுத்தியுள்ள துப்பாக்கி ஏர்கண் வகையை சேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த துப்பாக்கியால் சுட்டால் காயம் மட்டும் உருவாகும் என்பதும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here